அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா நிவாரண உதவி... திருமாவளவன் வலியுறுத்தல்..!

Published : Jun 02, 2021, 06:50 PM IST
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா நிவாரண உதவி... திருமாவளவன் வலியுறுத்தல்..!

சுருக்கம்

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா நிவாரண உதவி தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா நிவாரண உதவி தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
கொரோனா பெருந்தொற்றினால் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், உயிரிழக்கும் ஊடகவியலாரின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளர் களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைப்பதற்கும், உயிரிழந்த ஊடகவியலாளரின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கிடைப்பதற்கும் தமிழக அரசு கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த உதவித் தொகையை பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!