வேகம் எடுக்கும் கொரோனா.. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு..?? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

Published : Aug 20, 2021, 10:15 AM IST
வேகம் எடுக்கும் கொரோனா.. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு..?? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

சுருக்கம்

அந்தவகையில் கடந்த மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிவரை 16-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. 

வரும் 23 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக நெருக்கடியான நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோதும் திறம்பட செயல்பட்டு மக்களை கொரோனா தொட்டியிலிருந்து பாதுகாத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கடந்த மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிவரை 16-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில்

ஊரடங்கை  நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. குறிப்பாக தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில், கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தொடர்பாகவும் மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளது அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக தொட்டு அதிகரித்து வரும் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதியில் 3வது அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் உள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய  நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!