ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா... பரிசோதனை செய்து கொண்ட தமிழிசை..!

Published : Jul 13, 2020, 12:07 PM IST
ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா... பரிசோதனை செய்து கொண்ட தமிழிசை..!

சுருக்கம்

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா ராஜ்பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 10 பேருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 10 பேரும் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில், அதனைத் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், '' தனக்குச் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அதில்  'நெகட்டிவ்' என வந்துள்ளது. மேலும் தனது கணவர், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கும் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளதாக'' ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!