இதே வேகத்தில் போனால் நிச்சயம் கொரோனா காலி..!! வைரசை ஒழித்துக் கட்ட அதிரடியில் இறங்கிய ராதாகிருஷ்ணன்..!!

By Ezhilarasan BabuFirst Published May 14, 2020, 4:38 PM IST
Highlights

இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து வருவதையும் கடைகளில் இடைவெளியுடன் நின்று பொருட்கள் வாங்குவதையும் கண்காணிக்கவும் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன .  

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணியினை சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று  துவக்கி வைத்தார் .  தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முகக்கவசங்கள்  வழங்கவும் உத்தரவிட்டார் அதன்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில் 13-5 -2020 அன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது அதில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் முகக்கவசங்களை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .  அதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 650 குடிசை பகுதிகளில் வசிக்கும் சுமார் 26 லட்சம் மக்களுக்கு மறுபயன்பாடுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணியினை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சோழிங்கநல்லூர் மண்டலம் கண்ணகி நகரில் இன்று துவக்கி வைத்தார் . சோழிங்கநல்லூர் மண்டலம் சுனாமி நகர் ,  கண்ணகி நகர் ,  மற்றும் எழில் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .  இப்பகுதியில் ஒவ்வொருவருக்கும் மறு பயன்பாட்டுடன் கூடிய ஆறு முகக்கவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம்  வழங்கப்பட்டன. 

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று தடுக்க அனைவரும் கட்டாயம் இந்த முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும் அவ்வப்போது கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் எனவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . மேலும்  முதலமைச்சரின் உத்தரவுபடி பொதுமக்களுக்கு  இன்று முகக்கவசங்கள்  இலவசமாக வழங்கப்பட்டன .  கண்ணகி நகர் பகுதியில் நேற்று மட்டும் 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது இந்தப் பகுதியில் மொத்தம் 27 நபர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளது  இந்தப் பகுதியில் 13 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன இங்குள்ள குடியிருப்புகளில் நாள்தோறும் சென்று சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .  இந்த கணக்கெடுப்பின்படி காய்ச்சல் அறிகுறி இருந்த நான்கு நபர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . 

இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து வருவதையும் கடைகளில் இடைவெளியுடன் நின்று பொருட்கள் வாங்குவதையும் கண்காணிக்கவும் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன .  கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு  தேவையற்ற கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டு வியாபாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர் .  நாள்தோறும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது ,  இப்பகுதியிலுள்ள மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் வைரஸ் தொற்றில்  இருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது . கொரோனோ தொற்றுக்கு  தகுந்தவாறு பகுதிவாரியாக திட்டமிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் . கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களின் அறிகுறிகளின் தன்மைக்கு ஏற்ப அவர்களை கண்காணித்து தேவைப்படின் வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ இதே பகுதியில் உள்ள கோவிட் காப்பு மையங்களில் தக்கவைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . 

கொரோனா வைரஸ் தொற்று உள்ள நபர்களை மருத்துவமனைக்கோ அல்லது கோவில் பாதுகாப்பு மையங்களுக்கோ கொண்டு சென்ற பின்னர் அவர்களது குடும்பங்களை சார்ந்த  பெண் குழந்தைகள் முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களை  பாதுகாக்கும் பொருட்டு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ள படி தனியாக திருமண மண்டபங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சத்தான உணவுகள் அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இப்பகுதி மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்டு எளியமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
 

click me!