கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்..!

Published : Jul 11, 2020, 04:04 PM ISTUpdated : Jul 11, 2020, 04:06 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்..!

சுருக்கம்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.   

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

சென்னையில், கொரோனா நோயை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் நியமித்தார். இக்குழுவில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இடம் பெற்றிருந்தார். அடையாறு, சோழிங்கநல்லுார் உட்பட மூன்று மண்டலங்களில், நோய் தடுப்பு பணிகளை, ஒருங்கிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். கடந்த மாதம் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். மேலும், அவருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை தொடர்பு கொண்டு பேசினார். அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா ஏற்பட்டுள்ளது குறித்து, செய்தியாளர்கள், முதல்வரிடம் கேட்ட போது,  அதை அவரே மறுத்து விட்டார் என பதில் அளித்தார்.

இதனையடுத்து, ஜூன் 30ம் தேதி மியாட் மருத்துவமனை சார்பில், வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அமைச்சர்  அன்பழகனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்;- கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன் என்று கூறியுள்ளார். எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம். பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக 15ம் தேதி செய்தியாளர்களிடம் பேச உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..