அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியானது..!! அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2020, 1:59 PM IST
Highlights

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது. ஆனால் கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலில் இருந்து வந்ததையடுத்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சற்று முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  ஏற்கனவே அவரது மனைவி கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் ராஜூவுக்கும் கொரொனா உறுதியாகியுள்ளது. ராமாவரத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கே.பி அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது,  நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டிவருக்கிறது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருந்து வருகிறது, நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  இதுவரை 46,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தத்தில் 78,161 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை மாநில அளவில் சுமார் 1.765 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படிகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர், அதில் அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 4 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது, இதனையடுத்து சென்னை ராமாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது. ஆனால் கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலில் இருந்து வந்ததையடுத்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரும் அவர் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மற்றும் அவரது குடும்பத்தினரும், அமைச்சர் கே.பி அன்பழகன், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு மற்றும் அவரது மனைவி, பரமக்குடி தொகுதி எம்எல்ஏ சதன் பிரபாகரன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது  அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!