குன்னூரில் பரபரப்பு... ஹெலிகாப்டர் விபத்து... குடும்பத்துடன் சென்ற முப்படை தளபதி பிபின் ராவத்..!

Published : Dec 08, 2021, 02:10 PM ISTUpdated : Dec 08, 2021, 02:13 PM IST
குன்னூரில் பரபரப்பு... ஹெலிகாப்டர் விபத்து... குடும்பத்துடன் சென்ற முப்படை தளபதி பிபின் ராவத்..!

சுருக்கம்

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் Mi-17V5 முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளார் எனவும் அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.  

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் Mi-17V5 முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளார் எனவும் அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

குன்னூர் அருகே, கோவையில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில், ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பெயர் மற்றும் விவரம் இன்னும் வெளிவரவில்லை

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையததில் இருந்து ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு ராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் வந்தனர்.


பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸ், ராணுவம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்