எடப்பாடி அரசின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்திய கனிமொழி.. கொரோனா தொற்று தொடர்பான புள்ளி விவரங்களில் முரண்பாடு

By vinoth kumarFirst Published Sep 11, 2020, 12:01 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளி விவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளி விவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது. 

தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று ஜூன் மாதத்தில் செய்தி வெளியாகியது.  

தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது.

1/3 pic.twitter.com/OM9bVaMMYq

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

 

 

தமிழகத்தில் கொரொனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு என  திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!