B.Arch-படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு... ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2020, 1:37 PM IST
Highlights

11-ம் தேதி உத்தேச ஒதுக்கீடு நடைபெறும். அதைத் தொடர்ந்து, வரும் 12-ம் தேதி இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 1,940 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

B.Arch.,படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 51 கட்டிடவியல் கல்லூரிகளில் B.Arch.படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. நடப்பு ஆண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 52 கட்டிடவியல் கல்லூரிகளில் உள்ள 1,800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர கடந்த அக்டோபர் 23-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெற்றது. 

கடந்த 6-ம் தேதி 1,996 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், 7 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இன்றும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்த மாணவர்களுக்கு 11-ம் தேதி உத்தேச ஒதுக்கீடு நடைபெறும். அதைத் தொடர்ந்து, வரும் 12-ம் தேதி இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 1,940 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பொறியியல் படிப்புகளுக்காக ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், கலந்தாய்வில் குறைந்த அளவிலான மாணவர்களே பங்கேற்றதாக தொழில்நுட்பக் கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதாவது பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய உடன், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்த நிலையில், மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியிருந்தனர்.இந்நிலையில் பி ஆர்க் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருவது குறிக்கத்தக்கது. 
 

click me!