
இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி ஒன்றன் பின் ஒன்றாக இழந்து வருகிறது. உத்தரபிரதேசம், பாஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவா மற்றும் பஞ்சாப்பில் வெற்றி பெரும் என நினைக்கப்பட்ட நிலையில் தோல்வியே காங்கிரஸ் கட்சிக்கு மிஞ்சியது. கருத்து கணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெரும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தனர்.
இதே போலத்தால் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் 5 மாநில கருத்து கணிப்பு என்பது , சாப்பிடாமல் சாப்பாட்டை வர்ணிப்பது போல என்றும் கருத்துகணிப்பை வைத்து முடிவுக்கு வர முடியாது என கூறியிருந்தார்.இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவலோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தனர். ஆனால் ஒரு சில மணி நேரத்தில் 5 மாநிலத்திலும் காங்கிரஸ் பின்னோக்கி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து டிவியை ஆப் செய்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டனர். இதே போலத்தான் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் கார்த்தி சிதம்பரம், அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கிவிட்டார்.
இதனை மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று டுவிட்டர் மூலம் மக்களிடம் கேட்டுவிட்டார். ஆமாம் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நிலையில் நெட்பிளக்சில் என்ன பார்க்கலாம் என மக்களே பரிந்துரைங்கள் என கேட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கார்த்தி சிதம்பரத்தை டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.