ம.பி.,யில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்களாக்களுக்கு சீல்... அதிர்ச்சியில் கதர்கட்சி..!

Published : May 22, 2020, 03:58 PM IST
ம.பி.,யில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்களாக்களுக்கு சீல்... அதிர்ச்சியில் கதர்கட்சி..!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர்கள் தருண் பானோட், சஜ்ஜன் சிங் வர்மா மற்றும் ஹுகும் சிங் கராடா ஆகியோர் பங்களாக்கள் இதுவரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

மத்தியபிரதேசத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு ஆட்சியில் இருந்த சமயம் அரசு பங்களாக்கள் வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. பாஜக ஆட்சி அமைத்து 2 மாதங்களாகியும் அவர்கள் முறைப்படி அரசு பங்களாக்களை காலி செய்யாததால் அவர்களுக்கு மாநில உள்ளட்சித் துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நோட்டீஸ் வழங்கப்பட்டு அதற்கான அவகாசம் கடந்தும் அவர்கள் யாரும் இதுவரை காலி செய்வது தொடர்பான எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதை அடுத்து பல முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ பங்களாக்களை சீல் வைக்கும் பணியை பாஜக சிவராஜ் சிங் சவுகான் அரசு தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தருண் பானோட், சஜ்ஜன் சிங் வர்மா மற்றும் ஹுகும் சிங் கராடா ஆகியோர் பங்களாக்கள் இதுவரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி