பெரியார் படம் கொடுத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து.. பாஐக வெற்றி குறித்து நடிகர் சத்யராஜ் நக்கல் சிரிப்பு..

Published : May 06, 2021, 10:10 AM ISTUpdated : May 06, 2021, 10:13 AM IST
பெரியார் படம் கொடுத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து.. பாஐக வெற்றி குறித்து நடிகர் சத்யராஜ் நக்கல் சிரிப்பு..

சுருக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் சத்யராஜ் நேரில் சந்தித்து, பெரியார் படம் அளித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பாஜக வெற்றி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கே உரிய பாணியில் சிரித்து நக்கலடித்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் சத்யராஜ் நேரில் சந்தித்து, பெரியார் படம் அளித்து வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது பாஜக வெற்றி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கே உரிய பாணியில் சிரித்து நக்கலடித்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் (133 சட்டமன்றத் தொகுதிகள்) திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

  

இந்நிலையில்  திமுக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநரும் பதவியேற்க ஸ்டாலினை அழைத்துள்ளார். இந்நிலையில்  வருகின்ற ஏழாம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சராக ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக பல்வேறு அரசியில் கட்சி தலைவர் பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் சத்யராஜ் நேரில் சந்தித்து, பெரியார் படம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், 

சரியான தருணத்தில் கிடைத்த சரியான வெற்றி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். 

சவாலான காலகட்டம் அதனை மிகச் சிறப்பாகக் கையால்வார் என்று நம்புகிறேன். இந்த வெற்றியை ஒரு பெரியாரின் வெற்றியாக நான் கொண்டாடுகிறேன் அதனால் கையால் வரையப்பட்ட பெரியார் படத்துடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என கூறினார். அப்போது தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக வென்றுள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் அதிரடிப்படை பட பாணியில் நக்கலடிக்கும் வகையில் அவர் சிரித்தபடியே சென்றார். அவரின் இந்த சிரிப்பை பலரும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?