எடப்பாடி- ஓ.பி.எஸ் இடையே மோதல்..? உண்மையை போட்டுடைத்த அமைச்சர்..!

Published : Jun 02, 2019, 02:03 PM ISTUpdated : Jun 02, 2019, 02:04 PM IST
எடப்பாடி- ஓ.பி.எஸ் இடையே மோதல்..? உண்மையை போட்டுடைத்த அமைச்சர்..!

சுருக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓபிஎஸுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாகவும், தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி தடுத்து விட்டதால் அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டுகிறது. 

இந்நிலையில் இது குறித்து நன்னிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ், ’’எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அதிமுக ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலுமே அவர் தோற்று விட்டார். அதிமுக ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்வர் என்பதை விரைவில் நிருபிப்போம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!