உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி !! நாளை அறிவிக்க வருகிறார் அமித்ஷா !! வேறு யார் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறாங்க தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Feb 18, 2019, 9:56 PM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பாஜக தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். கூட்டணியை இறுதி செய்து நாளையே அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. இந்த  தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை  முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கூட்டணி குறித்த அறிவிப்பையும் அமித்ஷா அறிவிக்க உள்ளார்.

நாளை காலை  10.20 அணியில் இருந்து 11 மணிக்கும் அமித்ஷா விமானம் மூலம் சென்னை வருகிறார்.
இது தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை நாளை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் பாமக நிறவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக முக்கிய தலைவர்கள் என அனைவரும் நாளை அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம். ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகியவை இடம்பெற உள்ளதாகவும், ஏ.சி.சண்முகமும், பச்சமுத்துவும் பாஜக வேட்பாளர்களின்  தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்ள உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!