76 கோடி வருமானத்திற்கு அதிமாக சொத்து குவிப்பு புகார்.. மாஜி அமைச்சர் கே.சி வீரமணி அளித்த பயங்கர விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 1:23 PM IST
Highlights

அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து கே.சி வீரமணி விளக்கமளித்துள்ளார்: சிலரின் தூண்டுதலின் பேரில், காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் என் மீது அளிக்கப்பட்டுள்ளது. 

சிலரின் தூண்டுதலின் பேரில்  காழ்புணர்ச்சி காரணமாக தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கூறியுள்ளார். தன்மீது வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த  மாதம் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர்  மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து முன்னால் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. அதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் அதிமுகவை கலங்கடித்துவரும் நிலையில், 

ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடத்தில் அதிரடியான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:  முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி 2011 முதல் 2016 வரை பொது ஊழியராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த காலத்தில் தன் வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடிகளை குவித்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்துள்ளது. 

கே.சி வீரமணி 2011 முதல் 2016 வரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தார். கே.சி வீரமணிக்கு 43 ஆயிரம் கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும்  மற்றும் 15 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் வசமாகி உள்ளது எனவும் அரப்போர் இயக்கம் கூறியுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணியின் பெயரில் உள்ள அசையும் சொத்துகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 43 கோடி அதிகமாக உள்ளது. மேலும் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 76.65 கொடி வருமானத்திற்கு மீறிய சொத்து சட்டவிரோதமாக குவித்துள்ளார் என அதில் கூறியுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து கே.சி வீரமணி விளக்கமளித்துள்ளார்: சிலரின் தூண்டுதலின் பேரில், காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் என் மீது அளிக்கப்பட்டுள்ளது. சிறுவயது முதலே வணிகத்தில்  ஈடுபட்டு முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே போல் தேர்தல் பிரசாரத்தின் போதும் பிரமாண பத்திரத்தில் கூட முறையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தான் எந்த முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 

click me!