முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் - பண்ருட்டி வேல்முருகன் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 03:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் - பண்ருட்டி வேல்முருகன்  பேட்டி

சுருக்கம்

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அதிமுக கூட்டணியில் இணைந்திருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியிலிருந்து விலகினார். முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நம் தமிழர் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் சென்று பார்த்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது. முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்யும் அதே வேலையில் அவரை பார்ப்பதற்காக இன்று அப்போலோ வந்தேன்.

முதல்வரை பார்க்க சென்றேன் அவர் நலமுடன் இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் நலமுடன் இருப்பதற்கான மகிழ்ச்சியான செய்தியை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

முதல்வரை நேரில் பார்த்தீர்களா என்று கேட்ட போது முதல்வர் சிகிச்சையில் இருப்பதால் பார்க்கவில்லை ஆனால் முத்த தலைவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்