ஆளே மாறிப்போன கருணாஸ்... எடப்பாடியிடம் சரண்டர்..!

Published : Jan 02, 2019, 02:24 PM ISTUpdated : Jan 02, 2019, 02:25 PM IST
ஆளே மாறிப்போன கருணாஸ்... எடப்பாடியிடம் சரண்டர்..!

சுருக்கம்

அதிமுக அரசுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வந்த கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சரண்டரானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

அதிமுக அரசுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வந்த கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சரண்டரானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துகளை கூறினார். முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக அரசையும் வன்மையாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன. 

அப்போது அவரது எம்.எல்.ஏ பதவியை நீக்கவும் சபாநாயகர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார் கருணாஸ். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு முதல்வருக்கு மலர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகருக்கு எதிரான நோட்டீஸை திரும்பப்பெற்ற கருணாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சரண்டராகி உள்ளார். 

கருணாஸின் இந்த அணுகுமுறை அவரது குணத்தில் மட்டுமல்ல ஆடையிலும் வெளிப்பட்டது. நடிகராக இருந்து திடீர் அரசியல்வாதியாக உருமாறிய கருணாஸ் திருவாடானையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் வெள்ளை வேட்டி - சட்டை சகிதம் வலம் வந்தார். ஆனால் இன்று சட்டசபைக்கு வந்த அவரிடம் ஒயிட் அண்டு ஒயிட் மிஸ்ஸிங். முழுக்கை சட்டையை இன் பண்ணிக் கொண்டு, பளிச் முகத்துடன், ஷூ அணிந்து ஒரு கார்பரேட் நிறுவன அதிகாரி போல் புது தெம்புடன் வந்திருந்தார். அப்போதே அவர் ஏதோ ஷாக் கொடுக்க இருக்கிறார் எனத் தெரிய வந்தது. அதன்படியே முதல்வர் எடப்பாடியை சந்தித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!