உங்களுக்கே இப்படின்னா... உழைத்து உயர்ந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும்..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரவெடி...!

Published : Apr 15, 2019, 01:13 PM IST
உங்களுக்கே இப்படின்னா... உழைத்து உயர்ந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும்..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரவெடி...!

சுருக்கம்

நாளை மாலையுடன் பிரச்சாரம் முடியும் நிலையில் உள்ளதால் இன்று மற்றும் நாளை வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்.

நாளை மாலையுடன் பிரச்சாரம் முடியும் நிலையில் உள்ளதால் இன்று மற்றும் நாளை வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி முனுசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துக்களை பேசினார்.

அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்லாமல் அவருடைய சொந்த ஊரான சிவகங்கையில் கூட எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்யவில்லை.காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தது வேறு எந்த எதிர்க்கட்சியினரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்துவிட்டது.

ஏற்கனவே ராகுலுக்கு இருந்த ஆதரவும் கூட பிரதமர் வேட்பாளர் ராகுல் என ஸ்டாலின் அறிவித்த பிறகு ஆதரவும் குறைந்தது என சுட்டிக்காட்டினார். மேலும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து உங்களுக்கே இவ்வளவு கெத்து என்றால்.. உழைத்து உயர்ந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும் என பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார்.

இவருடைய பேச்சை கேட்ட கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து கைத்தட்டி உற்சாகம் அடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!