தூய்மை இந்தியா திட்டம்.. தமிழகம் இரண்டாவது இடம்..மத்திய அரசு அறிவிப்பு..

Published : Mar 27, 2022, 03:29 PM IST
தூய்மை இந்தியா திட்டம்.. தமிழகம் இரண்டாவது இடம்..மத்திய அரசு அறிவிப்பு..

சுருக்கம்

துய்மை இந்தியா இயக்கம் - 2.0 திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தி, தமிழகம் 2 வது இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றும் நோக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு கிராமபுறங்களில் தூய்மை இந்தியா - 2.0 திட்டம் கொண்டுவரப்பட்டது. மகாத்மா காந்தியின் 150-வதுபிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி, தற்போது நாடுமுழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன. அங்கெல்லாம் துய்மை - இந்தியா திட்டத்தின்ன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் தெலுங்கானா மாநிலம் இடம் பெற்றுள்ளது. 13,960 கிராமங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்றி சாதனை படைத்துள்ளது. அடுத்தப்படியாக, இரண்டாம் இடத்தை பெற்றுள்ள தமிழகம்,  11,477 கிராமங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றியுள்ளது. 

மத்திய அரசு மூலம் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்துக்காக 1,40,881 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுப்புற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் சாண எரிவாயு உள்ளிட்ட கழிவு மேலாண்மை திட்டங்கள், சமையலறை மற்றும் சலவை நிலைய கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மனிதக் கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய குடிநீர், சுற்றுப்புற சுகாதாரத் துறை செயலர் வினி மகாஜன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?