இட்லி - தோசை, அப்பளம் வடை... சீன அதிபருக்கு தமிழகத்தில் தடபுடல் விருந்து..!

Published : Oct 10, 2019, 05:33 PM IST
இட்லி - தோசை, அப்பளம் வடை... சீன அதிபருக்கு தமிழகத்தில் தடபுடல் விருந்து..!

சுருக்கம்

தமிழகம் வரும் சீன அதிபர்  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட இருக்கிறது.   

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இருவரும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதோடு மாநிலத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளது. தமிழகத்துக்கு வரும் சீன நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு அனைவரும் வியக்கும் வண்ணம் பிரம்மாண்ட கிராமிய கலை நிகழ்ச்சியுடன் கூடிய வரவேற்பும் கொடுக்கப்படுகிறது.

நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை வந்ததும் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிடுகிறார். அவருக்காக சீன உணவு வகைகளுடன் தென்னிந்திய உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.

இதில் அவர் விரும்பி சாப்பிடும் வெங்காயம் மற்றும் இறைச்சியால் தயாரிக்கப்பட்ட சாதம், முட்டைக்கோஸ் - கேரன் கலந்த வறுத்த ஈரல், நூடுல்ஸ், வெஜிடபிள் சாலட், பயறு வகைகள், சூப் வகைகள் இடம் பெறுகின்றன. இதனுடன் தென்னிந்திய உணவு வகைகளான அரிசி சாதம், சாம்பார், வத்தக் குழப்பு, ரசம், பிரிஞ்சி, பிரியாணி, பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், தக்காளி, கேரட் சூப் உள்ளிட்ட 28 வகையான உணவு வகைகள் இடம் பெறுகிறது.

காலை உணவாக சிக்கன் டிக்கா, சோயா மசாலா, சவ் மின்,  ஷன்காளிணி நூடுல்ஸ்,  பொறித்த கறியுடன் கூடிய  சோப் கோளிணிசோறு, தேநீர், குளிர்பானம், கேக், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் இடம் பெறுகிறது. இந்த உணவு பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பார், சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி உள்ளிட்டவைகளையும் இடம் பெற செய்துள்ளனர். தமிழர்களின் உணவு வகைகளை சீன அதிபருக்கு விளக்கி சொல்லி ருசி பார்க்க வைக்கவும் சமையல் கலை வல்லுனர்கள் அங்கு நிறுத்தப்படுகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை