பாட்டியின் கண் எதிரில் குளத்தில் மூழுகிய சிறுவர்கள்.. ஒரே நாளில் நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு..

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2021, 11:44 AM IST
Highlights

இவர்கள் குடும்பத்தோடு பொங்கல் விடுமுறைக்கு தனது பாட்டி வீட்டிற்கு மறவமங்கலம் அருகே பாப்பங்குளத்திற்கு வந்துள்ளனர். வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் பாட்டியோடு குளிக்க இரு சிறுவர்களும் இறங்கினர் அப்போது ஆழம் தெரியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.  

சிவகங்கை மாவட்டதில் இருவேறு சம்பவங்களில் குளத்தில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கணேசன் ராமலட்சுமி தம்பதியினர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஹன்சிகா (7)  பழனிகுமார் (5) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். 

இவர்கள் குடும்பத்தோடு பொங்கல் விடுமுறைக்கு தனது பாட்டி வீட்டிற்கு மறவமங்கலம் அருகே பாப்பங்குளத்திற்கு வந்துள்ளனர். வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் பாட்டியோடு குளிக்க இரு சிறுவர்களும் இறங்கினர் அப்போது ஆழம் தெரியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள். சிறுவர்கள் நீரில் மூழ்குவதை கண்ட  பாட்டி அவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டு சத்தம் போட்டார். அதில் அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் குளத்தில் ழூழ்கிய சிறுவர்களைஅங்கும் இங்கும் தேடினர். அதற்குள் அவர்கள் தண்ணீரில் மாயமாகினர். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின் சிறுவர்கள் இருவரும் சடலமாக  மீட்கப்பட்டனர். பெற்ற பிள்ளைகளின் உடலை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் கதறிய காட்சி காண்போரை கலங்கை வைப்பதாக இருந்தது. 

அக்கா தம்பி இருவரும் குளத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் சிவகங்கை மாவட்டம் பாகனேரி அடுத்துள்ள நகரம்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற ஸ்ரீநிதி(10) வைஷ்ணவி(15) என்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் குளத்தில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
 

click me!