ஓபிஎஸ், இபிஸ் அம்மாவின் பிள்ளைகள்.!ஸ்டாலினுக்கு பொறாமையாக உள்ளது..அமைச்சர் ஆர்பி. உதயக்குமார்..!

Published : Oct 08, 2020, 08:40 AM IST
ஓபிஎஸ், இபிஸ் அம்மாவின் பிள்ளைகள்.!ஸ்டாலினுக்கு பொறாமையாக உள்ளது..அமைச்சர் ஆர்பி. உதயக்குமார்..!

சுருக்கம்

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்து முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்றுல் முடிவாகி விட்டது. பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் நேற்று உற்று நோக்கி காத்திருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுகவிற்கு வழிகாட்டுக்குழு அமைத்து அதற்கான நபர்கள் யார் யார் என்றும் அறிவிக்கப்பட்டது.   

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “நாங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டோம். ஸ்டாலின் சொன்னது எதுவும் நடக்கவில்லை. ஸ்டாலினுக்கு பொறாமையாக இருக்கிறது. இந்த அரசு கவிழும் என பத்தாயிரம் முறை ஸ்டாலின் கூறியிருப்பார். ஏதாவது நடந்து விடும் என கனவு கண்டார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர்கள் அம்மாவின் பிள்ளைகள். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர்கள். ராமன், லட்சுமணன் போல இன்றும் இருக்கிறார்கள். தொண்டர்களும் மகிழ்ச்சியாக உள்ளோம்.மக்களை வலிமையோடும், பொலிவோடும், சாதனைகளோடும் களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். இதுபோன்ற ஆரோக்கியமான நிலை வர ஒவ்வொரு தொண்டரும் எதிர் பார்த்தோம். அது நனவாகி உள்ளது. தேர்தல் களம் என்றாலே கருத்து களம் தானே. ஒவ்வொருவரும் கருத்து சொல்வார்கள். கருத்துகளுக்கு மக்களின் அங்கீகாரம் எவ்வாறு உள்ளது என்பது தான் அவசியம்.” 

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!