எடப்பாடியோடு சேர்ந்து கொழுப்பு கூடிவிட்டது.. சண்முகம் கணக்கு எடுக்கப்படுகிறது.. முரசொலியில் தாறுமாறு விமர்சனம்

By Asianet TamilFirst Published May 15, 2020, 9:28 PM IST
Highlights

 “எதுகூடச் சேர்ந்து எதுவோ எதுவாகவோ ஆகிவிடும் என்பார்கள். அப்படித்தான் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து கொழுப்பு கூடிவிட்டது, தமிழ் நாட்டின் தலைக்கனச் செயலாளர் சண்முகத்துக்கு! திமுக ஆட்சியில் நிதித் துறைச் செயலாளராக இருந்தபோது, கையது கொண்டு மெய்யது பொத்தி வாழ்ந்த சண்முகம், மண்புழு அமைச்சரவைக்கு தலைமைச் செயலாளர் ஆனதும், தனது அழுக்கு நகத்தை வைத்து எதிர்க்கட்சியினரைப் பிறாண்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். 

தலைமைச் செயலாளர் சண்முகத்தை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். அவருடைய அறையில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தினார் என்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

 
தலைமைச் செயலாளர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவருவோம் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு எச்சரித்தார். திமுக எம்.பி.களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தலைமை செயலாளர் சண்முகம், திமுக தலைவர் மீதும் மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, சண்முகம் ஆகியோர் பேட்டிகள், அறிக்கைகள் மூலம் பேசிய நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைதி காத்தார். இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை விமர்சித்து ‘தலைக்கணம் செயலாளர்’ என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அதில், “எதுகூடச் சேர்ந்து எதுவோ எதுவாகவோ ஆகிவிடும் என்பார்கள். அப்படித்தான் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து கொழுப்பு கூடிவிட்டது, தமிழ் நாட்டின் தலைக்கனச் செயலாளர் சண்முகத்துக்கு! திமுக ஆட்சியில் நிதித் துறைச் செயலாளராக இருந்தபோது, கையது கொண்டு மெய்யது பொத்தி வாழ்ந்த சண்முகம், மண்புழு அமைச்சரவைக்கு தலைமைச் செயலாளர் ஆனதும், தனது அழுக்கு நகத்தை வைத்து எதிர்க்கட்சியினரைப் பிறாண்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். தலைமைச் செயலாளர் பதவியே கொரோனா லிஸ்ட் படிக்கும் கீழ்நிலைக்குப் போய்விட்டது தெரியாமல், சோபாவில் உட்கார்ந்து தெலுங்குப் பட நாட்டாமைத்தனத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காட்டி இருக்கிறார் சண்முகம்!
ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும் வாலாட்டிக்கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எச்சரிக்கை விடுத்து ‘முரசொலி’யில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

click me!