
வெள்ள சேதம் மற்றும் மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர்.
சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர்.இந்நிலையில், கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ள சேதம் மற்றும் மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தமிழக மீனவர்களுக்கு உதவி வரும் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க பாதுகாப்பு துறை தேடுதல் வேஎட்டை தொடர உத்தரவிட வேண்டும் எனவும் பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.