பாஜக ஒரு திட்டம் அறிவிச்சு 8 ஆண்டு ஆச்சு.. இன்னும் வரலை!அது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல-ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jan 24, 2024, 1:41 PM IST

 "சாதிப் பிளவுகளும் மத வேறுபாடுகளும் தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
 


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து, ஏறுதழுவுதல் போட்டிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.  இதனை தொடர்ந்து நிகழ்சியில் பேசிய அவர்,  தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

அதுவும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு! கொண்டாடுகிற ஆண்டில் பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை

உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தியிருக்கோம் ஒன்று. தமிழினத்தினுடைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம் மதுரைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம் பிரமாண்டமாக மதுரை மாநகரில் அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மூன்றவதாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. பெயர்போன அலங்காநல்லூரில் இதை சொல்லுகின்ற நேரத்தில், 2015-ஆம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை!

2007-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும் தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் கழக ஆட்சியில்தான். ஆட்சி மாறியதும், 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, 'மெரினா தமிழர் புரட்சி' என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது. அமைதி வழியில் போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தி அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது!

திமுக அரசின் முயற்சியால் ஜல்லிக்கட்டு போட்டி

தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அதிமுக ஆட்சி அடிபணிந்தது அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது ஆனாலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது. அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா? "ஜல்லிக்கட்டு மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டுவண்டி பந்தயம் ஜல்லிக்கட்டு

போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை" என்று தெரிவித்தார்கள் ஒன்றிய அரசு தரப்பில் நமது திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது? "ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை அது உழவர்களின் வாழ்வோடும் பண்பாட்டோடும் கலந்தது. போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். காளைகளை நமது குடும்பங்கள் கவனத்தோடு வளர்க்கிறோம்" என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம்.

ஒற்றுமையாக விழாவை நடத்துவோம்

இவ்வளவு தடைகளையும் திமுக அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது. இந்த சாதனை வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், காளைகள் ஏறுதழுவுதல் பற்றிய அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும் ஓவியங்களும், புகைப்படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி!


அன்னை தமிழ் நிலத்துக்கு பேரறிஞர் அண்ணா "தமிழ்நாடு' என பெயர் சூட்டினார். தமிழுக்கு 'செம்மொழி' தகுதி பெற்று தந்தார் தலைவர் கலைஞர் இன்றைக்கு தமிழர் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அரங்கம் அமைத்திருக்கிறோம் இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது. "சாதிப் பிளவுகளும் மத வேறுபாடுகளும் தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம்! என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

Udhayanidhi : தமிழகத்தின் பொறுப்பு முதல்வராகிறார் உதயநிதி.? வருகிற 27 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு.?

click me!