சேலத்தில் ஆட்சியர், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!

Asianet News Tamil  
Published : Oct 31, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சேலத்தில் ஆட்சியர், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!

சுருக்கம்

chief minister palanisamy meeting with salem collector and officers

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மேலும் டெங்கு பரவாமல் இருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.

மேலும் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசு திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?