தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே முதல்வராவார்.. அடாவடி செய்யும் எல்.முருகன்.. கொதிக்கும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Jan 3, 2021, 6:23 PM IST
Highlights

தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் கூறியுள்ளது அதிமுகவை எரிச்சலடைய செய்துள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் கூறியுள்ளது அதிமுகவை எரிச்சலடைய செய்துள்ளது. 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஆனால், முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும் எல்.முருகன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி பழனிசாமியே என்று கூறி வருகின்றனர். 

இந்நிலையில், ராணிபேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார். விவசாயிகளின் நண்பனாகவும், தோழனாகவும் விளங்கும் பிரதமர் மோடி தான் உண்மையான சமூகநீதிக் காவலன். திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார். பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.  

திமுகவை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. வருகிற மே மாதம் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம். வெற்றிவேல் யாத்திரை மூலம் திமுகவை புலம்பச் செய்துள்ளோம். வெற்றிவேல் யாத்திரை மூலம் திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது என விமர்சனம் செய்துள்ளார். 

click me!