களைகட்டும் அதிமுக தலைமை அலுவலகம் - முதல்வர் எடப்பாடி வருகை...!!!

 
Published : Aug 21, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
களைகட்டும் அதிமுக தலைமை அலுவலகம் - முதல்வர் எடப்பாடி வருகை...!!!

சுருக்கம்

chief minister edappaadi palanisamy came to admk head office

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்திருப்பதால் மீண்டும் அந்த இடம் களை கட்ட ஆரம்பித்துள்ளது.

அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்ததையடுத்து தமிழகத்தை ஒரு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

ஜெவிற்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதைகளில் சசிகலாவுக்கு சற்றும் குறையவில்லை அமைச்சர்கள் மத்தியில். ஆனால் தனது முதலமைச்சர் பதவியை பிடிங்கிய கோபத்தில் பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக உடைத்தார். 

இதைதொடர்ந்து ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை என கூறி அவருக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர். 

இதனியையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி தமது தலைமியிலான அரசை பாதுகாத்து கொள்ளவே மும்முரம் காட்டினார். 

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் எடப்பாடி பதவியை பிடுங்க முற்பட்டதால் பகை முற்றி கொண்டது. 

இதனால் டிடிவியை விட்டு பிரிந்து எடப்பாடி பன்னீரிடம் ஆதரவு கோரினார். அவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒபிஎஸ் தரப்பும் இபிஎஸ்  தரப்பும் இணையும் தருவாயில் உள்ளது. இதைதொடர்ந்து அதிமுக தலைமை அலுவகத்தில் இருதரப்பு ஆதரவாளரகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்துள்ளார். இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!