டீ விலையை கேட்டு அதிர்ந்த முன்னாள் நிதியமைச்சர்!! டீ குடிக்கும் ஆசையே போச்சே.. இவருக்கே இந்த நிலைமையா?

First Published Mar 25, 2018, 11:23 AM IST
Highlights
chidambaram denied tea due to high price


பொதுவாகவே பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள், நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் கடைகள் ஆகியவற்றில், உணவு பொருட்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடும் பசியாக இருந்தால் கூட, அந்த உணவுப்பொருட்களை வாங்கி உண்ண வேண்டாம் என நினைக்கும் அளவிற்கு இருக்கும் அவர்கள் கூறும் விலை. 

இதனால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வேறு வழியில்லாமல், அதிகவிலை கொடுத்து அந்த உணவை வாங்கி சாப்பிடுகின்றனர்.

அப்படியான ஒரு சம்பவம், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கே நடந்துள்ளது. பேருந்து நிலையங்களிலேயே இந்த நிலை என்றால், விமான நிலையத்தில் சொல்லவா வேண்டும்? 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சென்னை விமான நிலையத்தில் டீ-யின் விலையை கேட்டு அதையை வேண்டாம் என்று கூறியதாக ஒரு டுவீட் போட்டுள்ளார்.

அந்த டுவீட்டில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு காஃபி கடையில், டீ கேட்டேன். சுடு தண்ணீரும், ஒரு டீயும் கொடுத்தனர். விலை ரூ.135. விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், டீ வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">At Chennai Airport Coffee Day I asked for tea. Offered hot water and tea bag, price Rs  135. Horrified, I declined. Was I right or wrong?</p>&mdash; P. Chidambaram (@PChidambaram_IN) <a href="https://twitter.com/PChidambaram_IN/status/977714327405789185?ref_src=twsrc%5Etfw">March 25, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

பிறகு, அந்த நபரிடம் இவ்வளவு விலை கொடுத்து இதை யார் வாங்குவார்? என கேட்டதற்கு, நிறைய பேர் என அந்த நபர் பதிலளித்தார் என சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Coffee Rs 180. I asked who buys it? Answer was &#39;many&#39;. Am I outdated?</p>&mdash; P. Chidambaram (@PChidambaram_IN) <a href="https://twitter.com/PChidambaram_IN/status/977714391306027008?ref_src=twsrc%5Etfw">March 25, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

முன்னாள் நிதியமைச்சராலேயே டீ வாங்கி குடிக்க முடியாத அளவிற்கு அதன் விலை உள்ளது. அப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை?
 

click me!