கொரோனா நகரமாகவே மாறிய சென்னை.!! உச்சகட்ட பதற்றத்தில் தலைநகர வாசிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published May 6, 2020, 11:55 AM IST
Highlights

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை  2008 ஆக உயர்ந்துள்ளது ,  இதில் அதிகபட்சமாக திருவிக நகரில் மட்டும் சுமார் 395 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை  2008 ஆக உயர்ந்துள்ளது ,  இதில் அதிகபட்சமாக திருவிக நகரில் மட்டும் சுமார் 395 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  சென்னை மாநகரத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக திருவிக நகர் உள்ளது தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை தமிழகத்தில் வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது ,  மாநிலம் முழுவதும் சுமார் 33 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் , இந்நிலையில் சுமார் 1,485 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் .இதுவரை  மாநிலத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த பகுதியாக சென்னை இருந்து வருகிறது . 

இதுவரை சென்னையில் 2008 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ,  மொத்தம் 319 பேர் இதிலிருந்து  குணமடைந்துள்ளனர் 1668 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , இதுவரை  சென்னையில் மட்டும் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் சென்னையில் மே 6 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் சுமார் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது அதாவது திருவிக நகரில் மட்டும் 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கோடம்பாக்கத்தில் 327 பேருக்கும் ராயபுரத்தில் 321 பேருக்கும் தேனாம்பேட்டையில் 230 பேருக்கும் அண்ணா நகரில் 169 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 149 பேருக்கும் வளசரவாக்கத்தில் 146 பேருக்கும் அம்பத்தூரில் 98 பேருக்கும் அடையாறில் 53 பேருக்கும் திருவெற்றியூரில் 38 பேருக்கும் மாதவரத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மணலி சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 13 பேரும் ஆலந்தூரில் 11 பேரும் பெருங்குடியில் 15 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது ,  ஆக மொத்தத்தில் சென்னையில் மட்டும் 2008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  இதுவரையில்  சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் சுமார் 325 பேர் குணமடைந்துள்ளனர் ,   இதில் அதிகப்படியாக ராயபுரத்தில் 98 பேர் குணமடைந்துள்ளனர் , அதிகம் பாதிப்பு உள்ள திருவிக நகரில் இதுவரை 51 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ராயபுரத்தில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .

 

 

click me!