வருமானவரித்துறை ரெய்டு... ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.15 கோடி பறிமுதல்...!

By vinoth kumarFirst Published Mar 29, 2019, 2:50 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சபேசன். தற்போது சென்னை நங்கநல்லூரில் வசித்து வருகிறார். அம்பத்தூரில் இவரது தொழிற்சாலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்காக இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவரின் பினாமியாக இவர் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் தேர்தல் செலவுக்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் நங்கநல்லூரில் உள்ள சபேசனின் வீடு, அலுவலகம், நண்பர்களின் வீடு, அலுவலகம் என்று 10 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வீடு மற்றும் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் சிக்கின. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சபேஷ், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் உள்ளாட்சித்துறை மற்றும் மின்துறை பிரிவுக்கான அனைத்து வேலைகளையும் எடுத்து செய்து வந்துள்ளார். இதனையடுத்து சபேஷிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் எங்கிருந்து வந்தது என சொல்ல முடியாமல் ஒப்பந்ததாரர் சபேசன் திணறி வந்தார். 

இதனையடுத்து வருமான வரித்துறை துருவிக் துருவிக் விசாரித்ததால் ஒப்பந்ததாரர் சபேசன் திடீரென மயக்கமடைந்த நிலையில் . 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நினைவு திரும்பியதும் மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறையினர் சபேசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 

click me!