2021 -ல் மாற்றம் வரும், அது மாற்று அணியால் வரும்..!! எல். முருகனுக்கு, கே. பாலகிருஷ்ணன் நெத்தியடி..!!

Published : Aug 18, 2020, 02:50 PM IST
2021 -ல் மாற்றம் வரும், அது மாற்று அணியால் வரும்..!! எல். முருகனுக்கு, கே. பாலகிருஷ்ணன் நெத்தியடி..!!

சுருக்கம்

2021 சட்டமன்ற தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.  

2021 -ல் மாற்றம் வரும், அது மாற்று அணியால் வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தி. நகரில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. அதனை வரவேற்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு சென்றால் அங்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து வாதாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இ-பாஸ் முறையை எளிமைப்படுத்தியதை போல, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பொதுப்போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். டாஸ்மாக் கடைகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். 

பாஜக தலைவர் கூறியது போல தமிழக அரசியலில் மாற்றம் வரும் அது அதிமுக கூட்டணியால் வராது. மாற்று அணியால் மட்டுமே வரும்.
பெண் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தி பேசியவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இடதுசாரிகள் சார்பில் காவல் ஆணையருக்கு நீண்ட கடிதம் அனுப்பினோம். இன்று கூட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சமூக வலைத்தளங்களில் பெண்களை பற்றி அவதூறு பரப்புவார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.

 

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!