கொரோனா நடவடிக்கையில் மோடி- எடப்பாடி சுய விளம்பரமா..? தயாநிதிக்கு எதிராக 1460 கமெண்டுகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 10, 2020, 1:07 PM IST
Highlights

இந்த நேரத்தில் கருத்து சொல்கிறேன் என மக்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி குளிர்காயக் கூடாது. இது உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம். 

கொரோனா நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் சுய விளம்பரம் செய்து கொள்வதாக திமுக எம்.பி தயாநிதி மாறனின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருகிம் நியூஸ் 18 தொலைக்காட்சி திமுக.எம்.பி தயாநிதி மாறனை அழைத்து விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து கேட்டது. அப்போது தயாநிதி மாறன் ஒரு தலை பட்சமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, மத்திய மாநில அரசுகள் எடுத்தும் வரும் நடவடிக்கைகளை விமர்சித்தார். டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா வைரஸ் வந்து விட்டது. அப்போது விட்டு விட்டு மக்களை இப்போது வீட்டிற்குள் அடைத்து வைப்பது எந்த விதத்தில் நியாயம்? 

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை ட்ரம்ப் மிரட்டி கேட்கிறார். அதற்கு அடிபணிந்து மோடியும் கொடுக்கிறார். இதையே இக்கட்டான சூழலில் நமக்கு அமெரிக்கா தருமா? நமக்கு போகத்தானே மீதியை கொடுத்திருக்க வேண்டும். இப்போது இங்கு அந்த மருந்துகள் கிடைக்கவில்லை. முக்கியமான பிரச்னைகளை கையாளாமல் மக்களை ஏமாற்ற வேறு விஷயங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா விஷயத்தில் ஊரடங்கைப்போட்டு விட்டு ஆராவாரம் செய்து சுய விளம்பரம் செய்து கொள்கிறார்கள்’’ என தயாநிதிமாறன் கருத்து தெரிவித்து இருந்தார்.

 
இந்த நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள், ‘’இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா? அவசியமற்றது. என தொலைக்காட்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அம்பானியை உரிமையாளராகக் கொண்டு ஈ-நாடு நிர்வகிக்கும் பாஜக ஆதரவு மறைமுக சேனலான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தி.க., கம்யூனிஸ்டு ஆதரவு மனநிலை கொண்டவர்களே அதிகம் பணியாற்றி வருகிறார்கள். அல்லது பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். 90 சதவிகிதம் கம்யூனிஸ்டு, வலதுசாரி சிந்தனைகொணடவர்கள், அல்லது அவர்களது வாரிசுகள் பணியாற்றும் இந்த சேனலில் செய்திகளும் அந்தக் கொள்கைகளை ஒட்டியே இருப்பதாக பார்வையாளர்களின் மதிப்பீடும் உள்ளது. 

கொரோனா தொற்றால் உலகமே பதற்றத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், வல்லரசான அமெரிக்காவே வழி தெரியாமல் விழி பிதுங்கி தவித்து வரும் நிலையில், இந்தியாவின் செயல்பாடுகள் இந்த விஷயத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாக பாரட்ட[[அட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் பேசாமல் அரசியல் வாதிகள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும். ஏனென்றால் இது ஒரு கொடூரமான தொற்று நோய். கவனமாகத் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் கருத்து சொல்கிறேன் என மக்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி குளிர்காயக் கூடாது. இது உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம். 

இந்த நேரத்தில் டிரான்ஸ்ஃபார்மர் மொத்தமாக வெடித்து விடும் என கருத்து சொல்வதெல்லாம் வக்கிரத்தின் உச்சம். வலதுசாரி சிந்தனைகள் கொண்ட பார்வையாளர்களே அதிகம் பார்க்கும் அந்த தொலைக்காட்சியில் தயாநிதியின் கருத்துக்கு 1460க்கும் மேற்பட்டோர் எதிர்கருத்தை பதிவு செய்துள்ளார்கள். மக்கள் தயாநிதி மாறனின் பேச்சை துளியளவு கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு இந்த எதிர் கருத்துக்களே சாட்சி.

 

எந்த விஷயத்தில் எப்படி பேச வேண்டும் என்பது புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி...! 

click me!