அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்ட மாணவனுக்கு குவியும் பிரபலங்களின் ஆறுதல்கள்!! சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த போட்டோ

Published : Feb 23, 2020, 11:21 AM IST
அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்ட மாணவனுக்கு குவியும் பிரபலங்களின் ஆறுதல்கள்!! சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த போட்டோ

சுருக்கம்

நேற்று குள்ளமான மாணவன் தன்னை நண்பர்கள் கேலி செய்கிறார்கள் .நான் இருப்பதை விட சாவதே மேல் என்று சொல்லி தன் அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்ட மாணவனின் வீடியோ சமூக வலை தளங்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதன் பிறகு அந்த மாணவனுக்கு விளையாட்டுத்துறை, பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆறுதல்கள் ஏராளம் அந்த புகைப்படம் இன்றைக்கு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கின்றது என்பது தான் ஹாட்டான செய்தி. 

T.Balamurukan

தற்போதுள்ள மாணவர்களுக்கு மனதளவில் தைரியத்தை அளிக்கும் கல்வி முறை கற்றுக்கொடுப்பதில்லை. வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு தன்னமிக்கையை கற்றுக்கொடுக்காமல் அவர்கள் மீது பாசத்தை மட்டுமே காட்டுகிறார்கள்.அதன் விளைவு தன் நண்பர்களாக இருந்தாலும் கேலி செய்தால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலை சிறிய குழந்தைகளுக்கு கூட இல்லை என்றே சொல்லும் அளவிற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர் சக மாணவர் ஒருவன் தன்னை கேலி செய்தற்க்காக தன் அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யார்ரகா பேலசிடம், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது, 9 வயது மகன் குவாடன், துாக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோவை, யார்ரகா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி, குள்ளமாக உள்ளான்.இதனால், பள்ளியில், சக மாணவர்கள் அவனை கேலி செய்கின்றனர். இதற்காகத்தான் அந்த சிறுவன், தன் அம்மாவிடம், 'தற்கொலை செய்து கொள்ள கயிறு தாருங்கள்' என, கேட்டு அழுதிருக்கிறான்.

அந்த சிறுவனது தாய் பேசும் போது..
'என் மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற போது, அவனை, சக மாணவர்கள் கேலி செய்வதை பார்த்தேன். 'ஒருவரை கேலி, கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த வீடியோவைப் பார்த்து உணர வேண்டும்' என, யார்ரகா பதிவிட்டுள்ளார். 'என் இதயத்தை நானே குத்திக்கொள்ள விரும்புகிறேன்; யாராவது என்னை கொலை செய்து விடுங்களேன்' என, சிறுவன் கதறும் வீடியோ,சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதயத்தை கனமாக்கிக் கொண்டிருக்கிறது.இந்த வீடியோ உலகத்தை உலுக்கும் வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

அச்சு அசல் திருமாவளவன் போன்றே இருந்த விசிக நபர் திடீர் மரணம்..!சிறுத்தைகள் அதிர்ச்சி
லட்சத்தீவில் பாகிஸ்தானை ஓடவிட்ட ஆற்காட்டின் இரட்டை நட்சத்திரங்கள்..! வரலாற்று சாதனை ஏ.ஆர்- ஏ.எல் முதலியார்கள்..!