“50 ஆயிரம் பேர் மட்டுமே தியாகம் செஞ்சா போதும்...” நீங்கள் எடுக்கும் வலுவான முடிவை பொறுத்தே சாத்தியம்... வலுக்கும் எதிர்ப்பு!

First Published Apr 5, 2018, 3:41 PM IST
Highlights
celebrities status against IPL 2018


காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக பிரச்சனைகளால் தமிழகமே போராட்டத்தால் ஸ்தம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள், மாணவர்கள்  மட்டுமல்ல திரைத் துறையினரைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தும் மத்திய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாததற்கும், தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

காமெடி நடிகர் சதீஷ், “லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?”  கொந்தளிதுள்ளார்.

நடிகர் விவேக், “கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். வெற்றி என்பது இளைஞர்கள், மாணவர்கள் எடுக்கும் வலுவான முடிவை சார்ந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.... காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பல விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், இந்த விசயத்தில் ஒரு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறியிருப்பதாவது... நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.

இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா... நம் இனத்தை அழித்தார்கள்; நாம் எதுவும் பேசவில்லை. நம் மொழியைச் சிதைக்கிறார்கள்; நாம் மௌனமாக இருக்கிறோம். நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும், போராடாமலே இருக்கிறோம். உறைந்து போய்க் கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு, நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும்போது, ஐபிஎல் எனும் மாய உலகத்துக்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசிய புரட்சிக்கு தீ வைக்கும், முட்டாள்தனமான விளையாட்டை நிராகரிப்போம்.

தமிழ் மக்களின் ஒற்றுமை கரு, கூடிவரும்போது, கருக்கலைப்பு செய்யவரும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தடை விதிப்போம். தமிழா! ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம். தமிழனை விளையாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் எங்கள் தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். இது எச்சரிக்கை அல்ல. அன்பு சுற்றறிக்கை” என்று கவிதை வடிவில் குறிப்பிட்டிருப்பதுடன்,

“உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது. மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் களம் காணுவார்கள் என்பதைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!