
தமிழகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் தலைமைக்கு மட்டும் வர வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது பேசிய பாரதிராஜா,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகமிழைப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.
காவிரி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் 4 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவோ, தண்ணீர் போதுமானதாக இல்லை அதனால் தண்ணீர் தர முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், சீமான், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. மணல் கொள்ளை தொடங்கி தண்ணீர் வரை கொள்ளை அடிக்கப்படுகிறது. தமிழகம் பாலைவனமாக்கப்படுகிறது. மொழியில் ஏமாற்றப்படுகிறோம். காவிரியில் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
தமிழகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தொழில் செய்யலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தலைமைக்கு மட்டும் வர வேண்டாம் என்றுதான்
சொல்கிறோம். ஆனால் எங்கள் படுக்கையில் பங்கு கேட்காதீர். குடும்பத்துக்கு ஒரு தலைவன்தான். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். கண்ணியமானவர்கள் தமிழர்கள் என்று பாரதிராஜா கூறினார்.