இன்னும் ஒரு மாதம்தான் …. காவிரி வழக்கில் தீர்ப்பு ரெடி !!

Asianet News Tamil  
Published : Jan 10, 2018, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
இன்னும் ஒரு மாதம்தான் …. காவிரி வழக்கில் தீர்ப்பு ரெடி !!

சுருக்கம்

Cauvery case judgement will be issue in one month

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில், ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பில் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அம்மனுக்கள் மீது தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, கிரண் மசும்தார் ஷா என்பவரை தலைவராக கொண்ட பெங்களூரு அரசியல் நடவடிக்கை குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பருவமழை பொய்த்ததால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் மொத்தம் 28.77 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. பெங்களூரு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களின் வருடாந்திர குடிநீர் தேவையே 26 டி.எம்.சி. ஆகும்.



எனவே, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டால், கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவதுடன், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு போதிய தண்ணீர் கிடைக்காது. இது, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, உச்சநீதிமன்றம்  தலையிட்டு, பெங்களூருவுக்கு போதிய குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவிரி பிரச்சினையில் ஏற்கனவே 20 வருடங்களாக ஏகப்பட்ட குழப்பம் நிலவி வருகிறது. காவிரி வழக்கில் தற்போது நாங்கள் தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்..

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களை கைவிட மாட்டோம்.. சட்டப்பேரவையில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!