தேர்தல் நியாயமாக நடக்கவில்லை.. உதயநிதி வெற்றி செல்லாது அறிவியுங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Sep 17, 2021, 6:06 PM IST
Highlights

சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. உதயநிதி தனது வேட்பு மனுவில் தன் மீதான குற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. தவறான தகவலை தெரிவித்து உள்ளார். அதனால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!