வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.

Published : Jan 18, 2021, 12:00 PM IST
வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை..  நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.

சுருக்கம்

அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 360 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து, வண்ணாங்குண்டு  கிராமத்தை சேர்ந்த நவாஸ்கான் என்பவரை  கைது செய்தனர். 

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 360 கிலோ கஞ்சாவை போலீசார்  பறிமுதல்  செய்து மூன்று பேரை  கைது செய்துள்ளனர்.  ராமநாதபுரம், நேரு நகர் 7வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருளான கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரபு சார்பு ஆய்வாளர்கள் குகன் மற்றும் பாண்டி தலைமையிலான போலீசார் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 360 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து, வண்ணாங்குண்டு  கிராமத்தை சேர்ந்த நவாஸ்கான் என்பவரை  கைது செய்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் விசாரணை செய்ததை அடுத்து இதில் தொடர்புடைய அப்துல் பாசித், மற்றும் வாசிம்கான் ஆகிய இருவரை  கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!