உங்களுக்கு வாரிசு இல்லைனா நாங்களா ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்? சசிகலா குறித்து ஆர்.எஸ்.பாரதி ஆபாச பேச்சு!

Published : Feb 10, 2021, 11:44 AM IST
உங்களுக்கு வாரிசு இல்லைனா நாங்களா ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்? சசிகலா குறித்து ஆர்.எஸ்.பாரதி ஆபாச பேச்சு!

சுருக்கம்

உதயநிதியை தொடர்ந்து சசிகலா குறித்து ஆபசமாக பேசியுள்ள தி.மு.க-வின் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ். பாரதியின் காணொலிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.   

உதயநிதியை தொடர்ந்து சசிகலா குறித்து ஆபசமாக பேசியுள்ள தி.மு.க-வின் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ். பாரதியின் காணொலிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டம் ஒன்றில் தி.மு.க-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார். அவர் பேசியதன் காணொளியில், ’’அண்மையில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நினைவு மண்டபத்தை திறந்தார்கள். தமிழகம் முழுவதிலும் இருந்து பஸ் ஒன்றிற்கு 40,000 ரூபாய் என்று கொடுத்தார்கள். பஸ்ஸில் ஏறுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுத்தார்கள். பஸ் ஓசி, 2,000 ரூபாய் கைச்செலவு, குவாட்டர், பிரியாணி என்று கொடுத்து 40 பேர் வரவேண்டிய பஸ்ஸில் 20 பேர் தான் வந்தார்கள். தமிழகம் முழுக்க ஆட்களை பஸ்ஸில் அழைத்து கொண்டு வந்து மெரினா கடற்கரையில் இறக்கினார்கள். வந்த கூட்டம் முழுவதும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் நினைத்தார்கள். இந்த மூதேவி முகத்தை பார்ப்பதை விட, கலைஞரோட நினைவிடத்திற்கு போவோம் என்று சொல்லி, அனைவரும் அங்கே சென்றார்கள்.

 

எம்.ஜி.ஆருக்கு பிறகு, ஆர்.எம்.வீரப்பனையா முதல்வர் ஆக்கினீர்கள்? இல்லையே. அவரின் மனைவி ஜானகியை தானே முதல்வர் ஆக்கினீர்கள். அதற்கு பிறகு 25 ஆண்டு காலம் திரையில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாக நடித்த ஜெயலலிதாவை தானே முதல்வர் ஆக்கினீர்கள். முதலில் மனைவி, பிறகு மனைவியாக திரையில் நடித்தவர். பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வர முடிந்ததா? ஆர்.எம்.வீரப்பனை கொண்டு வர முடிந்ததா? எங்களை பார்த்து வாரிசு அரசியல் என்று பேசுகிறீர்களே, உங்களுக்கு வாரிசு இல்லை என்றால் அதற்கு நாங்களா ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்?" என்று பேசியுள்ளார். 

இதற்கு முன், உதயநிதி ஸ்டாலின் பேசியதை போன்ற ஆர்.எஸ்.பாரதியும் ஆபாசமாக பேசியுள்ளார். "உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நீ அந்த அம்மையாரின் காலில் விழுந்து தானே முதல்வராக வந்தாய் என்று கூறினார். ஆனால் அதற்கு உதயநிதி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, டேபிளுக்கு உள்ள இரண்டு கால்களுக்கு நடுவில் புகுந்து, அந்த அம்மாவின் இரண்டு கால்களுக்கு கீழே விழுந்து கும்பிட்டார்", என்று பேசியுள்ளார். 

தொடர்ந்து திமுகவினர் ஆபாசமாக பேசிவருவது மக்கள் மத்தியில் அறுவறுப்பை ஏற்படுத்தி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?