போக்குவரத்து ஊழியர்களுடான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கும் நிலையில் தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்குவார்கள் என அதன் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுடான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொ.மு.ச. தொழிற்சங்கம் கூறியுள்ளது.
undefined
இதையும் படிங்க;- அறிவித்தப்படி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது! பொதுமக்கள் அவதி! என்ன செய்யப்போகிறது ஆளுங்கட்சி
இதுதொடர்பாக தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
இதையும் படிங்க;- பொங்கல் விழா.. சென்னையில் இருந்து 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் அளித்த தகவல்!
அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம் என சண்முகம் கூறியுள்ளார்.