மத்திய அரசுக்கு எதிராக ரஜினி பட நாயகி... போராட்டதிற்கு அறைகூவல்..!! அதிர்ச்சியில் அமித்ஷா. மோடி...!!!

Published : Jan 11, 2020, 02:59 PM IST
மத்திய அரசுக்கு எதிராக ரஜினி பட நாயகி... போராட்டதிற்கு  அறைகூவல்..!!  அதிர்ச்சியில் அமித்ஷா. மோடி...!!!

சுருக்கம்

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  '' நீங்கள்  எந்த கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல , நீங்கள் வன்முறையை ஆதரிக்கிறீர்களா.?  ரத்தம் வழியும் மாணவர்கள் பேராசிரியர்கள் முகங்கள் உங்களை உலுக்கவில்லையா. 

ரத்தம் வடியும் மாணவர்களின் முகம் உங்களை உலுக்கவில்லையா என பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா அதிரடியா கருத்து தெரிவித்துள்ளார் .  ஜெஎன்யூ  மாணவர்கள் மீது  நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகிறது. அதேபோல்  தங்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜெஎன்யூ   மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாகவும்.  பல்வேறு சமூக அமைப்புகள் ,  மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ,  ஜனநாயக சக்திகள் , மற்றும் திரைத்துறையை சார்ந்த  நடிகர் நடிகைகள் மாணவர்களுக்கு  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.   அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.   அவரின் ஆதரவுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டுக்களைப் கூறிவருகின்றனர் இந்நிலையில்  நடிகை தீபிகா படுகோனேவுக்கு  நடிகை சோனாக்ஷி சின்கா பாராட்டு தெரிவித்துள்ளார் .  இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  '' நீங்கள்  எந்த கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ,  நீங்கள் வன்முறையை ஆதரிக்கிறீர்களா.?  ரத்தம் வழியும் மாணவர்கள் பேராசிரியர்கள் முகங்கள் உங்களை உலுக்கவில்லையா. 

இப்படியே நாம்  நீண்டகாலம் அமைதியாகவே இருக்க முடியாது.  இது அமைதியாக இருப்பதற்கான நேரமும் அல்ல துணிந்து குரல் கொடுத்தாக  வேண்டும் அப்படி எதிர்த்துக் குரல் கொடுத்த  தீபிகா படுகோனுக்கும் மற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.  என அவர் தெரிவித்துள்ளார் ,  ஜெஎன்யூ  மாணவர்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருவது வலதுசாரி சிந்தனையாளர்களுக்கும் பாஜகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!