ஓட்டுறவங்க ஓட்டெல்லாம் இஷா கோபிகருக்கே...! பி.ஜே.பி.யின் வெறித்தனமான வெற்றி ஐடியா!

By Vishnu PriyaFirst Published Jan 28, 2019, 4:24 PM IST
Highlights

நடிகை இஷா கோபிகர் பி.ஜே.பி.யில் இணைந்தார். இணைந்த மாத்திர்த்தில் அவருக்கு போக்குவரத்து துறை பெண்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

* டாஸ்மாக் கடைகளில் வங்கி பணியாளர்க்ளே நேரடியாக வந்து பணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தங்கமணி.
(வெளங்கிடும், கலெக்‌ஷன் பண்ணுன காசை அப்படியே அங்கேயே ஒக்காந்து கட்டிங் கட்டிங்கா வாங்கி திருப்பிக் கொடுத்துடணும் அவிய்ங்க! அதானே உங்க ஆச தல. ஆனாலும் கஜானாவை இப்பூடி நெரப்பக் கூடாதுங்க.)

* தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை: கமல்ஹாசன்.
(வெல்...அவங்களை ரவுடிகள்னு ஏன் சொல்றீங்க? கொஞ்சம் நாகரீகமா வசூல் ராஜாக்கள்!ன்னு கூட சொல்லலாமே , பிழையில்லை. விடுங்க  பாஸ், அவங்க எந்த பாப்புவோட அப்பாவுக்கு சவால் விட்டு இப்படி அரசியல்வாதியானாங்களோ!)

* நடிகை இஷா கோபிகர் பி.ஜே.பி.யில் இணைந்தார். இணைந்த மாத்திர்த்தில் அவருக்கு போக்குவரத்து துறை பெண்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்!: செய்தி. (வாவ்! அப்ப தேசத்துல உள்ள ஆட்டோ முதல் ஏரோப்ளேன் வரைக்கும் அத்தனை ‘ஓட்டுநர்களின்’ ஓட்டுக்களும் இந்த அம்மணி வழியா பி.ஜே.பி.க்குன் போயிடுமுன்னு சொல்லுங்க. வாட் எ பிளான் பாஸ்!)

* பன்னீர் செல்வம் உள்ளிட்ட பதினோறு எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் பிப்ரவரி முதல்வாரத்தில் தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க. ஆட்சி கவிழும்!: ஸ்டாலின். (அட போங்க தல, நீங்க இப்படித்தான் ரெண்டு வருஷமா சொல்லினு இருக்கீங்க. கனடாவுல வெயிலடிச்சா இங்கே ஆட்சி கவிழும், கத்தார்ல மழையடிச்சா இங்கே ஆட்சி கவிழுமுன்னு சொல்லிட்டே இருக்கீங்க. அது எல்லாம் நடக்குது, கூடவே இங்கே ஆட்சியும்  நடக்குது.)

* அரசு ஊழியர்கள் அரசாங்கத்துக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்தான். ஆனால் அதற்காக, அவர்களின் கோரிக்கைகளுக்காக அரசு கஜானாவை காலி செய்ய முடியாது: பொள்ளாச்சி ஜெயராமன். (ஆஹா சொல்லிட்டார்யா  மிஸ்டர் சிக்கனம். வெரம் தெரிஞ்சு பல வருஷமா பல பதவிகளை அனுபவிச்சுட்டு இருக்கீங்க. என்னைக்காவது அரசு பணம், மக்கள் பணம் வேஸ்ட் ஆகுதேன்னு உங்களுக்கான சலுகைகளை கொஞ்சூண்டு, அட கொஞ்சூண்டாச்சும் குறைச்சிருக்கீங்களாண்ணே? அப்புறம் எதுக்குண்ணே இந்த விமர்சனமெல்லாம்!)

click me!