தமிழக சட்டமன்றத்தில் பாஜக குரல்.. கு.க செல்வம் எம்எல்ஏ சஸ்பெண்ட்.ட்ரஸ்ட் விவகாரம்ஸ்டாலினை அலற வைக்கும் பாஜக..!

By T BalamurukanFirst Published Aug 5, 2020, 11:29 PM IST
Highlights

திமுகவில் இருந்து வெளியேறி வந்த விபி.துரைச்சாமி திமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிவரக்காத்திருக்கிறார்கள் அது நடக்கும் என்று சொல்லியிருந்தார்.அதுபடியே திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜக பக்கம் வந்து இணைந்திருக்கிறார். கட்சிதாவல் தடைச்சட்டத்தின் படி செல்வத்தின் பதவி பறிபோகும் என்பதால் திமுக அதிருப்தி எம்எல்ஏ என்கிற டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறது பாஜக. தமிழக சட்டசபையில் பாஜக எம்எல்ஏ இல்லாத குறைய இனி செல்வம் குரலில் பாஜக வின் குரல் ஒலிக்க இருக்கிறது.
 

திமுகவில் இருந்து வெளியேறி வந்த விபி.துரைச்சாமி திமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிவரக்காத்திருக்கிறார்கள் அது நடக்கும் என்று சொல்லியிருந்தார்.அதுபடியே திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜக பக்கம் வந்து இணைந்திருக்கிறார். கட்சிதாவல் தடைச்சட்டத்தின் படி செல்வத்தின் பதவி பறிபோகும் என்பதால் திமுக அதிருப்தி எம்எல்ஏ என்கிற டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறது பாஜக. தமிழக சட்டசபையில் பாஜக எம்எல்ஏ இல்லாத குறைய இனி செல்வம் குரலில் பாஜக வின் குரல் ஒலிக்க இருக்கிறது.

கு.க. செல்வம் பாஜக பக்கம் வருவதற்கான முழு அசைன்மெண்ட் விபி.துரைச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் தெரிந்ததும் செல்வத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது திமுக.பாஜக பக்கம் போயிருக்கும் கு.க. செல்வத்தின் எம்எல்ஏ பதவி எப்படி தப்பும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுகவை ஆதரித்த போது என்ன நடந்ததோ அதேபோன்று இவரையும் வைத்திருக்கலாம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலக்கட்டம். அப்போது தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. விஜயகாந்துக்கு எதிராக சொந்த கட்சி எம்எல்ஏக்கள் எதிர்குரல் எழுப்ப, அந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் என்ற அடையாளத்துடன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தராஜன் உள்ளிட்டவர்கள் வலம் வந்தனர்.எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை சற்று அதிகம் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் விஜயகாந்த். அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்த அவர்கள் பின்னர் ராசியாகி படிப்படியாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு அதிமுக அமைச்சரவையில் ஓபிஎஸ் உள்பட 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க அவர்களின் பதவிகளை பறிக்க வழக்கு போட்டது திமுக. கடைசியில் முடிவு எடுக்கவேண்டியவர் சபாநாயகர் தான் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த நிலையில் கு.க. செல்வம் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

எந்தவொரு எம்எல்ஏவாக இருந்தாலும், கட்சி மாறினால் அவரது பதவி பறிபோகும். ஆகவே தான் ஜெயலலிதா பாணியில் சட்டசபைக்குள் செல்வத்தை அதிருப்தி எம்எல்ஏவாக வலம் வரச்செய்து திமுகவுக்கு செக் வைப்பது என்ற விஷயத்தை உடைக்கின்றனர் பாஜகவினர்.அதாவது அதிருப்தி எம்எல்ஏ என்ற அடையாளத்துடன் திமுகவுக்கு குடைச்சல், இவரை கொண்டே திமுகவின் முக்கியமான, அதிருப்தியான எம்எல்ஏக்களை அடையாளம் கொண்டு கட்சிக்குள் இழுப்பது தான் பாஜகவின் பிளான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஐபேக் டீம் உதயநிதி இவர்களின் கை திமுகவிற்குள் ஓங்கிவிட்டது. இளைஞர்களை தவிர்த்து வயதான சீனியர்கள் யாருக்கும் மரியாதை இல்லை என்கிற விரக்தி மூத்த நிர்வாகிகளுக்குள் கலககுரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளது. இது வர இருக்கும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

இப்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கையில் வைத்துக் கொண்டே, முரசொலி டிரஸ்ட் விவகாரம், அறிவாலயம், கட்சிக்குள் நடந்த டீலிங் என அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து திமுகவை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்வது தான் பாஜகவின் பிளான்.திமுக வேதரத்தினம் போன்றவர்களை தூக்கியது. பதிலுக்கு பாஜக.., திமுக எம்எல்ஏவை தூக்கியிருக்கிறது. திமுக சமீபகாலமாகவே அடக்க வாசிக்க காரணம் அறக்கட்டளையில் குவிந்திருக்கும் கோடிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்கிற பயத்தில் இருக்கிறது திமுக. எந்த நேரத்திலும் பாஜக அந்த கோடிகளை கைவைக்க தயங்காது என்கிற எச்சரிக்கை மணி ஸ்டாலிக்கு அடித்திருக்கிறதாம் பாஜக.

click me!