மத்தியில் சர்வாதிகார போக்குடன் பாஜக ஆட்சி நடத்துகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

First Published Sep 3, 2017, 2:43 PM IST
Highlights
BJP with dictatorship


மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை என்றும் நீட் எனும் கொடூங்கரத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அனிதா தற்கொலையை கொச்சைப்படுத்தி பாஜக பேசுவது கொடுங்கோல் ஆட்சியை உணர்த்துகிறது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பில் சேரமுடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த அனிதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அனிதாவின் உடல், அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக
அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய - மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்துவோம் என்று கூறியுள்ளார். 

சமூக நீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனை தீ நெஞ்சில் எரிகிறது. கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர திமுக உறுதியுடன் பாடுபடும்.

மத்தியில் சர்வாதிகார போக்குடன் பாஜக ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இளம் பெண் அனிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது. அனிதா தற்கொலையை கொச்சைப்படுத்தி பாஜக பேசுவது கொடுங்கோல் ஆட்சியை உணர்த்துகிறது.

மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை என்றும், நீட் எனும் கொடூங்கரத்தால் கொலை செய்யப்பட்டுள்ளர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

click me!