கோட்டையை பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்... அண்ணாமலை அதிரடி!!

Published : May 22, 2022, 03:08 PM IST
கோட்டையை  பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்... அண்ணாமலை அதிரடி!!

சுருக்கம்

அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்று கூறி உள்ளதாக திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்று கூறி உள்ளதாக திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் நரேந்திர மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு குறைப்பேன் என்று கூறி உள்ளது 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைத்து கொடுக்க வேண்டும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும்.

இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும். 72 மணி நேரத்திற்குள் சொன்னத்தை செய்யவில்லை என்றால் கோட்டையை  பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மன்மோகன் சிங் ஒவ்வொரு முறையும் அனைத்து மாநில முதல்வர்களை கேட்டு தான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா? இறக்கினாரா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும் போது பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல.

காலையில் ராஜிவ்காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். இது என்ன செயல் என்று தெரியவில்லை. பேரறிவாளன் ஆரத்தழுவி வரவேற்றது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது. இது போன்று முதல்வர் நடந்து கொள்வதால் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நடுரோட்டில் பயமின்றி ஒருவரை வெட்டுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!