அதிமுக "வலிமை" பெற சசிகலா வேண்டும்..எடப்பாடிக்கு 'ஷாக்' கொடுத்த அண்ணாமலை..

Published : Dec 21, 2021, 11:41 AM IST
அதிமுக "வலிமை" பெற சசிகலா வேண்டும்..எடப்பாடிக்கு 'ஷாக்' கொடுத்த அண்ணாமலை..

சுருக்கம்

‘அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.சசிகலா அதிமுகவுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, பாஜகவின் விருப்பமும் அதுதான்’  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருக்கிறார். அதில், ‘எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது பேசியதை எல்லாம் இப்போது மறந்துவிட்டது திமுக. திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் பேசுகின்றனர். மாநில நலனுக்கான திட்டங்களை வகுப்பதில் கடந்த 6 மாதங்களாக எந்த செயல்பாடும் திமுக அரசிடம் இல்லை. ஒரு ஆட்சி அமைந்து 6 மாதம் எந்த ஒரு மதிப்பீடும் செய்ய முடியாது. தமிழகம் அடுத்த 5, 10 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தொலைநோக்குப் பார்வை திமுக அரசிடம் கிடையாது. புதிய திட்டங்களை உருவாக்குவதில் போதுமான அறிவாற்றல் திமுகவுக்கு இல்லை. 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருக்கிறோம்.அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.சசிகலா அதிமுகவுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, பாஜகவின் விருப்பமும் அதுதான். தொண்டர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்தால் அதன்படிதான் நடக்க வேண்டும். சசிகலாவின் சரி, தவறுகள் தொடர்பான எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிக்க முடியாது. 

அதேநேரத்தில் அதிமுகவின் நல்ல தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு தொடர்பாக பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சொல்ல முடியாது. அதேநேரத்தில் சில தரப்பு இது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. பாஜக தனது கொள்கைகளை முன்னிறுத்துகிறது. திமுகவுக்கோ கொள்கைகளே இல்லை. அதிமுகவின் செல்வாக்கை சிதைத்து பாஜக வளர திட்டமிடுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!