கூட்டணி டீலா? நோ டீலா ? இல்லைன்னா சிறைதான் மிரட்டும் பாஜக … முடிந்தால் மோதிப்பார் !! கெத்து காட்டும டிடிவி…

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 9:13 AM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பாஜக படாதபாடுபட்டு வரும் நிலையில். ஒன்றினைய முரண்டு பிடித்து வரும் டி.டி.வி.தினகரனை, வழிக்கு கொண்டு வர பழைய இரட்டை இலை வழக்கை கையில் எடுக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் வழக்கை சந்திக்க தயார் என பாஜகவுக்கு கெத்தாக பதில் சொல்லி  அனுப்பிவிட்டாராம் தில் தினகரன்.

அதிமுக உடைந்து போயிருப்பதால் அது இனி தேறாது என நினைத்து திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக பெரு முயற்சி செய்தது. கனிமொழி , துரைமுருகன் போன்றோர் மூலம் பாஜக முட்டி மோதிப் பார்த்தது. ஆனால் ஸ்டாலின் மிக ஸ்டிராங்காக கதவடைத்து விட்டார்.

இதையடுத்து மீண்டும் அதிமுக பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது பாஜக . இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் என அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்தால்,  அந்த கட்சி பலம் பெற வாய்ப்புள்ளதாக கருதுகிறது பாஜக.

 

இதையடுத்து அதிமுக, அமமுக மற்றும் அதிமுகவை உடைத்து தனிக்கட்சியாக செயல்பட்டு வரும் திவாகரன் உள்ளிட்டோரை ஒன்று சேர்த்து புதிய அதிமுகவை உருவாக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக சிறையில் உள்ள சசிகலாவிடமும் அமித்ஷா மூலம் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இபிஎஸ், பிரதமர் மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்தபோது இந்த திட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அப்படி கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்தால் அந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து தமிழகத்தில் எம்.பி. சீட்டுகளை அள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஆனால் நான் எப்போதுமே பாஜக எதிர்ப்பாளன்தான் என்றும், இபிஎஸ், ஓபிஎஸ் போன்ற பாஜகவின் அடிமைகளுடன் இணைய முடியாது என திட்டவட்டமாக டிடிவி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கை காரணம் காட்டி அவரை சிறையில் வைத்து விடப்போவதாக தினகரனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது போன்ற பூச்சாண்டி வேலைகள் எல்லாம் என்னிடத்தில் வேண்டாம் என்றும் அதிமுக, இரட்டை இலை போன்றவற்றை சட்டப் பூர்வமாக நான் கைப்பற்றுவேன் என்றும் தினகரன் தில்லா பதில் அளித்துள்ளார். இதனால் பாஜக தனது அடுத்த கட்ட மூவைத் தொடங்கியுள்ளது.

click me!