
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது ஒரு வியாதி என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர்.
இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது ஒரு வியாதி எனவும், நீட் தேர்வை எதிர்ப்பது போன்று ஐஐடி நுழைவுத் தேர்வை ஏன் எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை எனவும், நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை வெளியிடாததால் மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கு சட்ட விதிகளில் இடம் இல்லை எனவும், நீட் தேர்வின் முலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற முடியும் என்பதால் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.