முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி..!

Published : Dec 28, 2020, 09:19 PM IST
முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி..!

சுருக்கம்

அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என்றும் இது வலிமையான கூட்டணி என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.  

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய தேசிய கல்வி கொள்கை தேவை என 50 லட்சம் கையெழுத்துகள் இடப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். திமுகவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கை, நான்கு மொழி கொள்கை வரை உள்ளன. இதன்மூலம் திமுக இரட்டை வேடம் போடுவது உறுதியாகியுள்ளது.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.


அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எல். முருகன், “அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது. எங்களின் கூட்டணி வலிமையானது” என்று எல்.முருகன் தெரிவித்தார். அதிமுக -பாஜக இடையே முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், அதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்த்த எல்.முருகன், “கூட்டணி தொடர்கிறது” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!